Search This Site

Tuesday, January 13, 2009

சிக்-குன் குனியா : ரத்த மாதிரிகள் சேகரிப்பு

http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=7778&cls=&ncat=TN

சத்திரப்பட்டி : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேலாயுதபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட் டவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிக்-குன் குனியா நோய் அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்தனர். உறுதி செய்ய ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. வேலாயுதபுரத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பலர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம், விட்டுக் விட்டுக் காய்ச்சல் இருந்தது. இது தொடர்பாக நேற்று "தினமலரில்' செய்தி வெளியானது.

ஆய்வு: அதை தொடர்ந்து சிவகாசி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், டாக்டர்கள் அனந்தகுமார், பூங் கொடி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று காலை வேலாயுதபுரத்தில் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். வீடு வீடாக சென்ற செவிலியர்கள், காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள், கை, கால் வலி காரணமாக நடக்க முடியாதவர்கள் குறித்து கணக்கெடுத்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிகமாக அங்குள்ள துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் வசதிகள் செய்யப்பட்டன. டாக்டர் பூங்கொடி தலைமையிலான குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து ஊசி மருந்து அளித்து வருகின்றனர்.


ரத்த மாதிரிகள்: சிக்-குன் குனியாவை உறுதிப்படுத்துவதற்காக கஸ்தூரி(50), பெத்தம்மாள்(70), வெள்ளைச்சாமி(59) ஆகியோரது ரத்த மாதிரிகள் மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சிக்-குன் குனியாவை பரப்பும் "ஏடிஎஸ்' கொசுக்கள் இப்பகுதியில் உள்ளதா என்பதை கண்டறிய பூச்சியியல் துறை குழுவினர் இங்கு வர உள்ளனர்.
துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ""அறிகுறிகளை பார்க்கும் போது சிக்-குன் குனியாவாக இருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும் மருத்துவ கல்லூரி அறிக்கைக்கு பின் தான் உறுதியாக கூற முடியும். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும் வரை சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
சுகாதார நடவடிக்கை: "ஏடிஎஸ்' கொசுக்கள் காலை 6 மணியிலிருந்து பகலில் மட்டுமே மனிதர்களை கடிக்கும். கொசு உற்பத்தியை தடுக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சுகாதாரத்து துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை சுற்றியும், உடைந்த காலி டப்பாக்களிலும் தண்ணீரை தேங்கவிடாமல் செய்தும், தண்ணீர் பாத்திரங் களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தினர். ஊராட்சி நிர்வாகம் மூலம் கொசு மருந்து அடிக்கவும், குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்ச்சிய தண்ணீரை குடிக்கும் படி அறிவித்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக்குழுவை அணுகுமாறு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

The Comments are moderated. It will be published only after being by the screened by our team. We request your patience in this regard.

TargetPG on FaceBook