http://www.dinamalar.com/News_Detail.asp?Id=176680
சென்னை : புதிய மருத்துவக் கல்வி இயக்குனராக வம்சதாரா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்குனர்(பொறுப்பு) பதவியில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை இருந்தார். அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீன் பதவியில் இருந்த வம்சதாரா புதிய மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திங்களன்று புதிய பதவியில் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. கனகசபை இனி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பை மட்டும் கவனிப்பார்.